உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப் பெருமாள் கோவிலில் பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம்!

வரதராஜப் பெருமாள் கோவிலில் பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம்!

புதுச்சேரி: காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவிலில், பஞ்ச மூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி ஞானாம்பிகா சமேத காளத்தீஸ்வரர் சுவாமி கோவில் 11ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் ரிஷபம், சூரிய பிரபை, அன்னம், நாகம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.பிரம்மோற்சவ விழாவின், 12ம் நாளான நேற்று, பஞ்சமூர்த்திகள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (19ம் தேதி) உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !