உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள்!

ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள்!

காரிமங்கலம்: காரிமங்கலம் மந்தைவீதி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில், சங்கடஹரசதுர்த்தி வழிபாடு, இன்று நடக்கிறது. இதையொட்டி, மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தேவகாண்ட்லா இளைஞர் மன்றத்தினர் செய்துள்ளனர். * காவேரிப்பட்டணம் மெயின்ரோடு, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹரசதுர்த்தி வழிபாடு இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை, 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * தர்மபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ விநாயகர் வேல்முருகன் கோவிலில், மாலை, 6 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர். * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் உள்ள சங்கடஹர கணபதிக்கு, இரவு, 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !