உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சர்ச்களில் புனிதவெள்ளி சிலுவை பாதை வழிபாடு!

ராமநாதபுரம் சர்ச்களில் புனிதவெள்ளி சிலுவை பாதை வழிபாடு!

ராமநாதபுரம் : புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் துவங்கினர். முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு ஏப்.13ல் ஊர்வலம் சென்றனர். இதைதொடர்ந்து அப்போஸ்தலர்கள் 12 சீடர்களுக்கு இயேசு விருந்தளிக்கும் பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்வு ஏப்.17ல் நடந்தது. சிலுவையில் இயேசு அறையப்படும், புனித வெள்ளியான நேற்று, ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச்சில் வட்டார அதிபர் ராஜமாணிக்கம், சிவகங்கை ஒக்கூர் கபுச்சின் சபை குரு அன்பின் அமலன் தலைமையில் சிலுவை பாதை, சிலுவை வழிபாடு மற்றும் நற்கருணை ஆராதனைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்றனர். கீழக்கரை: முத்துப்பேட்டை தூய காணிக்கை அன்னை சர்ச்சில் சிலுவை பாதை, ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு பாதிரியார் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. அருட்திரு தந்தைகள் ஜேசுதாஸ், ஆசீர்வாதம் பங்கேற்றனர். நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி, திருப்பலி நடந்தது.கீழக்கரை தூய பேதுரு சர்ச்சில் அருட்திரு தேவதாஸ்ராஜன் பாபு தலைமையிலும், புனித அந்தோணியார் சர்ச்சில் அருட்திரு அகஸ்தின் தலைமையிலும் இயேசுவின் திருப்பாடுகளை நினைவு படுத்தும் வகையில் சிலுவை பாதை, மும்மணி தியானம், சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !