உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தான்குளம் மகரநெடுங்குழைகாதர் கோயிலில் கருடசேவை

சாத்தான்குளம் மகரநெடுங்குழைகாதர் கோயிலில் கருடசேவை

சாத்தான்குளம் : தென்திருப்பேரை அருள்மிகு ஸ்ரீமகரநெடுங்குழைகாதர் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி  கருடசேவை  நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 13 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக   கருடசேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி  விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், நித்திய கோஷ்டியும்,   சிறப்பு திருமஞ்சனமும்,கோஷ்டியும் நடைபெற்றது.  திருப்பேரை நாச்சியார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !