கும்பகோணம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4229 days ago
கும்பகோணம் : கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு, மாரியம்மனுக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் யாகசாலை பூஜையின் முதல் காலத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்ற பிறகு, கடம் புறப்பட்டு சென்றடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.