முத்துமாரியம்மன் மற்றும் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4229 days ago
கண்டமங்கலம்: வி.புதுப்பாளையம் முத்துமாரியம்மன் மற்றும் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 16ம் தேதி மாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளும், முதல் காலயாக பூஜையும் நடந்தது. கடந்த 17ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, கோ பூஜை, சூர்யபூஜை, துவாரபூஜை, மண்டல பூஜை, யாத்ரதானம் நடந்தது. காலை 8.15 மணிக்கு கலசங்களில் புனித நீர் புறப்பட்டது. 8.35 மணிக்கு முத்துமாரியம்மன், திரவுபதியம்மன், ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. எலவானாசூர்கோட்டை பகவதி உபாசகர் வெங்கட்ராம்ஜி சுவாமிகள் தலைமையிலான சிவனடியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.