உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணகி கோவிலில் பிளாஸ்டிக் தடை: கேரள கட்டுப்பாடு!

கண்ணகி கோவிலில் பிளாஸ்டிக் தடை: கேரள கட்டுப்பாடு!

தேனி: கண்ணகி கோவிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழாவின் போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கேரள வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழக – கேரள எல்லையில்  உள்ள கண்ணகி கோவிலில், மே 14ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.  விழாவிற்கு செல்லும் பக்தர்கள், தண்ணீர் பாட்டில்கள் உட்பட எந்த பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர், 20 லிட்டர் குடிநீர் கேன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவை இலையில் கட்டி எடுத்துச் செல்லலாம்; பாத்திரத்தில் கொண்டு செல்லலாம்; பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லக்கூடாது.  குமுளியில் இருந்து கேரள வனத்துறை அனுமதி பெற்று இ0யக்கப்படும், ‘ஜீப்’களில் மட்டும் செல்ல வேண்டும். இதற்குரிய கட்டணத்தை, கேரள வனத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இரு மாநிலங்கள் சார்பில், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !