உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னியபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது!

வன்னியபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது!

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் அமைந்துள்ள, அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அதையொட்டி, நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 21ம் தேதியான இன்று, ஹயக்ரீவ ஹோமம், 22ம் தேதி ஸ்ரீசுத்த, லட்சுமி ஹோமமும் இரவு கருட சேவையும் நடக்கிறது. 23ம் தேதி ஸ்ரீராமகாயத்ரிஹோமம், இரவு அனுமார் வாகனத்தில் வீதியுலா என, 26ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 26ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டமும், அன்று மாலை தீர்த்தவாரி, மறுநாள் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 28ம் தேதி சாற்று முறை, 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் திருப்ணி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !