உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி பொங்கல் வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி பொங்கல் வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி திருமுக்குளம் சக்கரத்தாழ்வாருக்கு, பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ,கடந்த இரு ஆண்டுகளாக மழை பெய்யாமல், கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர் வற்றி போனது. இதனால், மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தின் உள் பகுதியில் இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கலிட்டால், மழை பெய்யும் என்பது, இப்பகுதியினர் நம்பிக்கை. இதையடுத்து, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், நேற்று இரவு செட்டியக்குடியை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !