உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லூர் விசாலாட்சி கோவிலில் திருப்பணி துவக்க சிறப்பு பூஜை

புல்லூர் விசாலாட்சி கோவிலில் திருப்பணி துவக்க சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டை: புல்லூர் கிராமத்தி<லு<ள்ள பழமை வாய்ந்த அன்னபூரணி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில் திருப்பணிக்கான சிறப்பு பூஜையில் சாரதா ஆசிரம தலைமை மாதாஜி கலந்து கொண்டார். உளுந்தூர்பேட்டை அடுத்த புல்லூர் கிராமத்தில் அன்னபூரணி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வ நாதர் சுவாமி கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன், சீனு உட்பட சிலர் கோவிலை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவிலில் சிறப்பு யாகத்துடன் திருப்பணிகான பூஜை நடந்தது. சாரதா ஆசிரம தலைமை மாதாஜி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை தாங்கி திருப்பணியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !