உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் திருவிழா

மகா மாரியம்மன் கோவில் திருவிழா

கூடலூர் : கூடலூர் பாண்டியார் டான் டீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.கூடலூர் பால்மேடு அருகேயுள்ள பாண்டியார் டான்டீ சரகம் மகா மாரியம்மன் கோவிலின், 26ம் ஆண்டு திருவிழா 18ம் தேதி துவங்கியது. 19ம் தேதி பகல் 1:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இரவு 7:00 மணிக்கு அம்மன் திருதேர் ஊர்வலம் துவங்கியது. பறவை காவடி ஊர்வலம் மரப்பாலம், பால்மேடு சென்று கோவிலை வந்தடைந்தன. நேற்று காலை அதிகாலை 5:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பிற்பகல் 1:00 மணிக்கு மஞ்சல் நீராட்டு விழாவுடன் அம்மன் வீதி உலா மற்றும் வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !