பொள்ளாச்சியில் ராமநவமி விழா
ADDED :4229 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உலகநல வேள்விக்குழு சார்பாக ராமநவமி கொண்டாடப்பட்டது. வேள்விக்குழு தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார்; துணைத்தலைவர் நஞ்சப்பன் முன்னிலை வகித்தார். இதில் திருவிளக்கு பூஜை, ராமநாம ஜெபம் மற்றும் கோ பூஜை செய்யப்பட்டது. மேலும் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, சேலை ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து மே மாதம் 15ம் தேதி வரை பொள்ளாச்சி பகுதிகளில் ராமநவமி கொண்டாடுவதாக முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மகளிரணி அமைப்பாளர் உஷா, மாநில அமைப்பாளர் சதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.