ஊட்டி தோடர் இன மக்களின் பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி!
ADDED :4229 days ago
ஊட்டி: ஊட்டி தோடர் இன மக்களின் கோவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது. நீலகிரியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இயற்கையை கடவுளாக வணங்கி வருகின்றனர். இவர்களின் பழமை வாய்ந்த கோவில் புனரமைக்கப் பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே இந்த கோவிலை புனரமைக்க தோடர் இன மக்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து வரும் 30ம்தேதி இந்த கோவிலில் புற்கள் கொண்டு மேற்கூரை அமைக்கப்படும். இவர்களின் கோவில் முழுவதும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.