உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணகுள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்!

மணகுள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்!

கடலூர்: கூத்தப்பாக்கம் சந்தான நகர் மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று 2ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8.30 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் விமானத்துக்கும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !