சித்தகிரி முருகன் கோவில் உண்டியல் வசூல் எண்ணிக்கை
ADDED :4226 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் 13 ம்தேதி பங்குனி உத்திர விழா நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் தங்களது நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்தினர். மலை அடிவாரத்தில் நேற்று அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் புஷ்பராஜ் , விழா குழு தலைவர் அண்ணாமலை முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 793 ரூபாய் மற்றும் 85 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.