பழனி மலையில் பக்தர்கள் அவதி!
ADDED :4226 days ago
பழனி: பழனி மலைக்கோயில் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை, கோர்ட் உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று காலை அகற்ற முயன்றனர். அப்போது கடை உரிமையாளர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். இதனால் படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.