திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மே 13ல் வசந்தோற்சவம்!
ADDED :4280 days ago
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, அடுத்த மாதம் 13 முதல், வசந்தோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை காலத்தில், தாயாரை குளிர்விக்க, ஆண்டுதோறும் வசந்தோற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி, மே 13, 14, 15 ஆகிய நாட்கள் வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கு முன், மே 6ல் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. 12ல் முளை விடுதல் விழாவுடன் இந்த உற்சவம் தொடங்க உள்ளது. இந்த நாட்களில், அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும்.