நாமக்கல் புதுமாரியம்மன் கோவில் திருவிழா!
ADDED :4188 days ago
பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது, தொடர்ந்து நேற்று மாலை அபிஷேக ஆராதனையும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. விழாவில் இன்று மாலை சாமி யானை வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நாளை முதல் 27ம் தேதி வரை அன்னம் மற்றும் சர்ப்ப வாகனத்தில் திருவீதி உலா 28ம் தேதி மாலை வடிசோறு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ம் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது.