திருநாவுக்கரசர் கோவிலில் அப்பர் சதய திருவிழா!
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசர் கோவிலில் இரண்டு நாட்கள் சதய திருவிழா நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலில் திருநாவுக்கரசர் பிறந்த சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடக்கிறது. சதய திருவிழா நேற்று முன்தினம் 24 மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நவக்கிரக ஹோமம், மங்கல இசை, திருமுறை இன்னிசை நடந்தது.நேற்று (25ம் தேதி) காலை 6:00 மணிக்கு சிவபூசகர்கள் சிவபூஜை செய்தல், 8:00 மணிக்கு மங்கல இன்னிசை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசையும், 10:00 மணிக்கு ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன் ஓதுவாரின் இன்னிசையும், காலை 10:00 மணிக்கு மகந்யாச ருத்ர ஹோமம், மகந்யாச ருத்ர அபிஷேகம், 11:00 மணிக்கு வடலூர் ஊரன் அடிகளாரின் சிறப்புரை நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், 1:00 மணிக்கு மாகேஸ்வர பூஜை, மாலை 5:00 மணிக்கு மங்கல இசை, 6:00 மணிக்கு திருமுறை இன்னிசை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தருமபுரி 26வது ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குதலும், இரவு 9:00 மணிக்கு உற்சவர் அப்பர் சுவாமிகள் வீதியுலாவும், திருமுறை ஓதி அப்பர் ஐக்கிய காட்சியுடன் நிறைவு பெற்றது.