ஸ்ரீபெரும்புதூரில் தங்கப்பல்லக்கில் ராமானுஜர் பவனி!
ADDED :4184 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ராமானுஜர் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் சித்திரை விழா,கடந்த 15-ம் தேதி துவங்கியது. கடந்த 10 நாட்களாக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாள், திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, நேற்று ராமானுஜர் உற்சவம் துவங்கியது. முதல் நாள் உற்சவமான நேற்று காலை 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லக்கில் ராமானுஜர் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.