உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரருக்காக 30 அடிக்கு மேல் பந்தல்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்காக 30 அடிக்கு மேல் பந்தல்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் அறிவிப்பு: சித்திரை திருவிழாவை முன்னிட்டு உற்சவ நாட்களில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு வேளைகளில் மாசி வீதிகள் மற்றும் உற்சவ பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள வீதிகள் புறப்பாடாகும். எனவே, விட்டவாசல், அம்மன் சன்னதி மற்றும் நான்கு மாசி வீதிகளில் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். வேப்பிலை தோரணங்களையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !