குபேர கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :4183 days ago
பேரூர் : குபேர கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. குளத்துப்பாளையம் அருகே அறிவொளிநகரில் புதிகாக குபேர கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 5.00 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜையும், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும், எண்வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, இரண்டாம் காலயாக சாலை பூஜை, யாத்ராதானம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்,
* அகஸ்திய குடீரம் சிவஆகமச் செல்வர் சிவசெல்லமணி பட்டர் தலைமையில், விமானத்திற்கும், மூலாலய குபேர கணபதிக்கும் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.