மாரியம்மன் கோவிலில் சிறப்பு உற்சவ விழா
குன்னூர் : குன்னூர் காட்டேரி பகுதியில் உள்ள முனீஸ்வரர் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு உற்சவ விழா துவங்கியது. குன்னூர் காட்டேரி பகுதியில் உள்ள முனீஸ்வரர் மற்றும் மாரியம்மன் கோவிலில் 31வது ஆண்டு சிறப்பு உற்சவ விழா நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்று விழாவுடன் துவங்கியது. விழாவில் தோட்டக்கலை துறையினர், பண்ணை அலுவலர்கள், தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனை கங்கையில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 9:00 மணிக்கு அலகு குத்தி தேர்இழுத்தல், அக்கினி சட்டி, பால்குடம், காவடி ஊர்வலம் நடநக்கிறது.பகல் 12:00 மணிக்கு பூகுண்ட உற்சவ விழா, உச்சிகால பூஜை, அன்னதானம், இரவு 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை 11:00 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகம் கங்கையில் சேர்த்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரசு பண்ணை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.