சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :4182 days ago
சேத்தூர் : சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அக்கினிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.4,5 ம் நாளில் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7ம் நாளன்று அம்மன் பூ பல்லக்கில், வீதி உலா வந்தார். அன்று இரவு, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூ இறங்குதல், மாலையில், அம்மன் வீதி உலா வர, பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முளைப்பாரி, ஆயிரங்கண்பானை எடுத்து வந்தனர். மறுநாள் பொங்கல் வைக்கும் நிழ்ச்சி நடந்தது.