கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :4180 days ago
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மந்திரிஓடையில், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில், திருமலை நாயக்கர், பாண்டிய மன்னர்கள் வழிபட்டு வந்தனர். மாதம் மும்மாறி மழை பெய்து, இருபோகம் நெல் விளைந்து வந்தது. சிறிய அறையில் இருந்த இக்கோயிலுக்கு, 1980, 1998ல் கும்பாபிஷேகம் நடத்தினர். தற்போது கோபுரம் எழுப்பப்பட்டு, விநாயகர், சுப்பிரமணியர், பூர்ணபுஷ்பகலா சமேத நடுகாட்டு அய்யனாருக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.