நாமக்கல் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :4180 days ago
பரமத்திவேலூர் : நாமக்கல் மாவட்டம், பேட்டை புதுமாரியம்மன் தீ மிதி திருவிழா கடந்த 22-ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 25-ம் தேதி மாலை பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மன் காமதேனு வாகனத்தில் சிறப்பு திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்றுசனிக்கிழமை மாலை சுவாமி அன்ன வாகனத்திலும் , நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி சர்ப்ப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.