உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

திருவாரூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

திருவாரூர் : திருவாரூர்  தப்பளாம்புலியூர் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா  நாளை (ஏப். 27) நடைபெறுகிறது. இக் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்து முடிவு செய்யப்பட்டு, பரிவார தேவதைகள் உள்ளிட்ட சன்னிதிகளில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த  21ம் தேதி கணபதி ஹோமமும், பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.ஏப். 24ம் தேதி இரவு 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள்  ,. நேற்று 2ம் கால யாகசாலை பூஜைகளும்,  தீபாராதனையும்,   மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இன்று  (ஏப். 26) காலை 8 மணிக்கு 4ம் கால யாக பூஜையைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு 5ம் கால யாகபூஜை நடைபெறுகிறது.  நாளை காலை   10 மணிக்கு மூலவர் விமான குடமுழுக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !