கும்பகோணம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4180 days ago
கும்பகோணம் : கும்பகோணம் பாலக்காட்டு காளியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணி விழாக்குழு மற்றும் ஏ.ஆர்.ஆர். காலனி தெருவாசிகள் இணைந்து பழுது நீக்கி திருப்பணி செய்யப்பட்டது. புதிதாக விநாயகர், முருகன், முனிஸ்வரர், பாலக்காட்டு காளியம்மன் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 2வது கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.