திருவேடகத்தில் பிரதோஷ விழா
ADDED :4183 days ago
திருவேடகம் : திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இங்கு சுவாமி சன்னதி முன் எழுந்தருளிய நந்தீஸ்வர சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பின் ஓதுவார் திருப்பாசுரம் பாட, பக்தர்கள் புடைசூழ ஆடிவீதியில் ஏலவார்குழலிஅம்மன், ஏடகநாதர் சுவாமி எழுந்தருளினர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டி விழா குழுவினர், கோயில் நிர்வாக அதிகாரி சுமதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோயில், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது.