சிவகங்கை சக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா
ADDED :4182 days ago
சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு குடியிருப்பில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல்நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதையொட்டி தினமும் சக்தி மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.வரும் மே 2ஆம் தேதி பால்குடம், அக்னிசட்டி, பறவைக்காவடி போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்த உள்ளனர். அன்று மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.