மன்னார்குடி நாகநாதசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்
ADDED :4181 days ago
மன்னார்குடி; மன்னார்குடி அருகே சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளி நாகநாதசாமியுடன் அமிர்த நாயகி அம்மனும் அருள் பாலித்து வருகிறார். தேவார பாடல் பெற்ற தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதயம் நட்சத்திர நாளில் சந்தனபிரகாச தினம் விழா நடைபெறுவது வழக்கம். விழாவில் நாகநாதசாமிக்கு பக்தர்கள் அரைத்துக் கொடுத்த சந்தனத்தால் சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சங்காபிஷேகம் , மகாதீபாராதனை நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர்.