உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயிலில்.. மழை வேண்டி வருண ஜபம்!

பழநிகோயிலில்.. மழை வேண்டி வருண ஜபம்!

பழநி: பழநி தேவஸ்தான உபகோயில்களில் மழை பெய்ய வேண்டி, வருண ஜபம் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.  திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் தொடர்ந்து கடும் வறட்சி நிலவுகிறது. விவசாய ஆதாரங்களாக உள்ள அணைகள், குளங்களில் தண்ணீர் இன்றி உள்ளன. விவசாயம் முற்றிலும் பொய்த்து போய்விட்டது. குடிநீருக்கும் கிராமமக்கள் போராடவேண்டியநிலை உள்ளது. இதனால், மழை பெய்ய வேண்டி, பழநி தேவஸ்தான உபகோயிலான லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில், ஆண்டாள் பாசுரம், நாலாயிரதிவ்யபிரபந்தம் ஆகியவற்றிலிருந்து பாடல்களை பாடி சிறப்பு யாக பூஜைநடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில், கழுத்தளவு தீர்த்ததொட்டியில், ஸ்தானிக அர்ச்சகர்கள் அமர்ந்து, மழைவேண்டி, வருணபகவானை நோக்கி, திருஞானசம்பந்தர் பாடிய பண்மேகநாத குறிஞ்சி பதிகம் பாடினர். அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, மேகரஞ்சனி ராகத்தில் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் உள்ள நந்திக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. கலசங்கள் வைத்து வருணயாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !