சித்திரை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்!
ADDED :4517 days ago
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி, நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று அதிகாலை, அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, கடலில் புனித நீராடினார்கள். இதனை தொடர்ந்து, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீராடினார்கள். பின், கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.