உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல்

மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல்

குளித்தலை: குளித்தலையில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் வரும், 4ம் தேதி பூச்சொரிதல் விழா மற்றும் காப்புக்கட்டு திரு விழா நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 11ம் தேதி உற்சவ மாரியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ம் தேதி இரவு அரண்மனை மாவிளக்கு, 20ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மதியம், 2.30 மணிக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 23ம் தேதி மாலை, 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆற்றில் கம்பம் விடும் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !