உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலம் மீட்கக்கோரி கலெக்டரிடம் புகார்!

கோவில் நிலம் மீட்கக்கோரி கலெக்டரிடம் புகார்!

ஈரோடு: ஈரோடு, புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், மாட்டுத்தம்பிரான், பொட்டுசாமி, மாகாளி அம்மன் கோவில் நிலத்தை, தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் மனு வழங்கினர். ஈரோடு கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் போடப்பட்ட மனுவில், கூறியதாவது: ஈரோடு மாவட்டம், சென்னிமலை, புஞ்சை பாலதொழுவு கிராமம், வெங்கமேடு ஆதிதிராவிடர் காலனியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பத்தாண்டுக்கு மேலாக, அந்த காலனியில் கிணற்றுமேட்டில், மாட்டு தம்பிரான், பொட்டுசாமி, மாகாளி அம்மன் கோவில் கட்டி, வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் வெளியூரை சேர்ந்த சிலர், கோவிலுக்கு அருகிலுள்ள நிலத்தை வாங்கி, வீட்டை கட்டியவர், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார். மேலும், வீட்டின் கழிப்பறையை, கோவிலுக்கு அருகில் கட்டி, கழிவு நீரை கோவில் பகுதிக்கு வரும்படி செய்கிறார். கடந்த, 19ம் தேதி சென்னிமலை போலீஸாரிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. மத ரீதியான மோதல்கள் ஏற்படும் முன்பாக, கோவிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை, கலெக்டர் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !