இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
ADDED :4229 days ago
ஆக்கூர் : நாகை மாவட்டம், செம்பனார்கோவில் , மேலப்பாதி கிராமத்தில் இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிசேகம், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமர், லெட்சுமணர், சீதையுடன் கூடிய ஆஞ்சநேயர், நாகராஜசாமி ஆகிய சாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.