உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுந்த வாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

வைகுந்த வாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

மயிலம்: ஆலகிராமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வைகுந்த வாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆலகிராமத்திலுள்ள  வைகுந்தவாச பெருமாள் கோவிலில் 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு 108 கலச பூஜை வழிபாடுகள் நடந்தது.  மாலை 5 மணிக்கு  மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  சிறுவர், சிறுமியர்கள்  கோலாட்டம், கும்மிபாட்டு போன்றவற்றில் கலந்து கொண்டனர். பக்தர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வைத்து நேர்த்தி கடன்  செலுத்தினர். சுவாமி வீதியுலாவில் ஜனகவல்லி வைகுந்தவாசபெருமாள் சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !