உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கை!

பழநி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கை!

பழநி: பழநி மலைக்கோயிலில், இரண்டாம் கட்ட உண்டியல் எண்ணிக்கையில், ரூ.98 லட்சத்து 12 ஆயிரத்து 295 வசூலாகி உள்ளது. பங்குனி உத்திர விழா ஏப்.,16 ல் முடிந்ததை முன்னிட்டு, ஏப்., 21 ல் பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ஒரு கோடியே 59 லட்சத்து 40 ஆயிரத்து 145 கிடைத்தது. மறுநாள் (ஏப்., 22 ) பழநி கோயிலில் படிக்கடைகள் அகற்றும் பணி நடந்ததால், உண்டியல் எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று நடந்த இரண்டாம் கட்ட உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக 98 லட்சத்து 12 ஆயிரத்து 295 ரூபாய், தங்கம் 220 கிராம், வெள்ளி 7 ஆயிரத்து 800 கிராம், வெளிநாட்டு கரன்சி 885 இருந்தது. இதில், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், ஆள்ரூபம், தாலி, காசுகள், கொலுசு, வீடு, கை காப்புகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கீட்டாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !