பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவசை நிகும்பலா யாகம்!
ADDED :4186 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை யொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மிளகாய் வற்றலைக் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து, சர்வ அலங்காரத்திற்கு பின் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. உடுக்கை அடித்தனர். யாகம் வளர்க்கப்பட்ட குண்டத்தை பக்தர்கள் வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் காப்புக் கயிறு, எலுமிச்சம் பழம் பிரசாதம் வழங்கினர்.