திருப்பூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை பூச்சாட்டு விழா!
திருப்பூர்: பிச்சம்பாளையம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை பூச்சாட்டு பொங்கல் திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.திருப்பூர், பிச்சம்பாளையம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை பூச்சாட்டு பொங்கல் திருவிழா கடந்த 14ம் தேதி, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராமசாந்தியுடன் துவங்கியது. பூச்ச õட்டு விழா, பொரி மாற்று தல், சிறப்பு அபிஷேக பூஜைகளும், விநாயகர் வழிபாடு,முளைப்பாலிகை இடுதல், கம்பம் நடுதல், அக்னிசட்டி வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. திருக்கம்பத்தி ற்கு, பெண்கள் தண்ணீ ர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.நேற்று காலை 10.30 மணிக்கு,சிறப்பு அபிஷேகமும், மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மலர் பல்லக்கில் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடந்தது. இன்று காலை 6.00 மணிக்கு,மாவிளக்கு பொங்கல், சிறப்புபூஜை, கம்பம் எடுத்த ல் ஆகியவையும், நாளை மஞ்சள் நீர், அம்பாள் திருவலம் வருதல் நிகழ்ச்சிகளும், நாளை மறுநாள், வசந்த உற்சவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.