முடியனூர் விநாயகர் கோவிலை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
ADDED :4185 days ago
கள்ளக்குறிச்சி: பழமை வாய்ந்த முடியனூர் விநாயகர் கோவிலை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . கள்ளக்குறிச்சி அடுத்த முடியனூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உரிய பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து வளாகம் முழுவதும் முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்குள் செல்வதற்கு அப்பகுதி மக்கள் அச்சப்படும் வகையில் உள்ளது. பழமை வாய்ந்த முடியனூர் கோவிலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.