திரவுபதி அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல்!
ADDED :4185 days ago
புதுச்சேரி : திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கூழ் வார்த்தல் நடந்தது. முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 5.00 மணிக்கு காளி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மாரியம் மன் வீதியுலா நடந்தது. நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவில் வளாகத்திலுள்ள கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில், சபாநாயகர் சபாபதி கலந்து கொண்டார். பூஜைக்கு பிறகு, பொது மக்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திரவுபதி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.