அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED :4184 days ago
கும்மிடிப்பூண்டி: .கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர் கண்டிகையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாதத்தை ஒட்டி அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளம் முழங்க ஐயர் கண்டிகையின் முக்கிய வீதிகளில் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பிறகு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.