மே 3- -ல் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை விழா
ADDED :4184 days ago
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குள்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா மே மாதம் 3 -ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றம், மே 13 -ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மண்டகப்படிகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அதன்பின் வீதி உலா வருதல் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் மே 10-ம் தேதி காலை நடக்கிறது. 12-ம் தேதி காலை தேரோட்டம் ,13-ம் தேதி சந்தனக்காப்பு, பத்தி உலாத்துதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.