உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன பத்ரகாளியம்மன் கோயிலில் வருண பூஜை

வன பத்ரகாளியம்மன் கோயிலில் வருண பூஜை

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் சார்பில், மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.கோயில் அருகிலுள்ள பவானி ஆற்றில் இப்பூஜை நடைபெற்றது. அர்ச்சகர்கள், வருண ஜெப மந்திரம் சொல்லி தீர்த்த கலசங்களுக்கு பூஜை செய்தனர்.  தொடர்ந்து,  மேள தாளங்கள் முழங்க, தீர்த்த கலசங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டன.பின்னர் அர்ச்சகர்கள் பவானி ஆற்றில் இறங்கி வருண ஜெப பூஜையை நடத்தினர்.  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !