உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தையில் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அனுமந்தையில் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மரக்காணம் : அனுமந்தை அங்காளம் மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி விசேஷ அபிஷேகம் ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம் மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 11.30 மணிக்கு யாகம் நடந்தது. நிலவள வங்கி தலைவர் ரவிவர்மன், ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், உபயதாரர்கள் ரவிச்சந்திரன், தாமோதிரன், எழிலன், செந்தில், அன்பரசன், ரஞ்சித், ராஜா, பாண்டுரங்கன், ஜனார்த் தனன், ரமேஷ், பாலு, விஜயக் குமார், சண்முகம், செந்தில், சுரேஷ், சேகர், ரவிச்சந்திரன், ராஜசேகர், குணசேகர், சங்கர், பழனிவேல், வரதராஜிலு கலந்து கொண்டனர். கோவில் தர்மகர்த்தா சின்னசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !