உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மன் கோவிலில் மழை வேண்டி யாகம்!

நாகம்மன் கோவிலில் மழை வேண்டி யாகம்!

விழுப்புரம் : தும்பூர் தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாகம்மன் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த தும்பூர் தாங்கல் கிராமத்தில் உள்ள சுயம்பு நாகம்மன் கோவிலில் கடந்த 28ம் தேதி காலை 10:00 மணிக்கு மழை வேண்டி வருண யாகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு வருண வழிபாடு நடந்தது. இதில் அக்கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோவிலில் தினந்தோறும் சித்திரை திருவிழா வழிபாடுகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !