குரியன்விளை கோயிலில் மகா யாகம்
களியக்காவிளை : களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் நேற்று காலையில் 27 பிறந்தநாள் நட்சத்திரங்களுக்கான மகா யாகம் நடைபெற்றது.இக்கோயிலில் இந்த விழா திங்கள்கிழமை தொடங்கியது. அன்று சிறப்பு பூஜைகளும், இரவு 10.30 மணியளவில் யாக சாலை தீபமும் ஏற்றப்பட்டது.தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை பஞ்சபூத நட்சத்திர மகா யாகம் நடைபெற்றது. இதில் 27 ஜென்ம நட்சத்திரங்களுக்கும் தனித்தனி குண்டம் அமைக்கப்பட்டு, பிரம்மஸ்ரீ சுரேஷ்சர்மா தலைமையில் வேத விற்பன்னர்களால் யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்குள்ள சிவன் சன்னதியில் கலச பூஜை நடைபெற்றது.நட்சத்திர மகா யாகம் மே 3--ம் தேதி வரை நடைபெறுகிறது. மே 4--ம் தேதி காலையில் கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தேவியின் சுயம்பு எழுந்தருளல், சமூக பொங்காலை, அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு பூப்படை, வேதாள பீடத்தில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.