நடனபாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி!
ADDED :4228 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி பட்டதைப் பக்தர்கள் பக்தியுடன் தரினம் செய்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான நடன பாதேஸ்வரர் கோவில் உள்ளது. மன்னர்கள் இக்கோவிலை கலை நயத்துடன் கட்டியுள்ளனர். இக்கோவிலின் மூலவர் சிலை மீது சித்திரை மாதம் 16 மற்றும் 17ம் தேதிகளில் மாலை நேரத்தில் சூரிய ஒளி மூலவர் மீது நேராக படுவது சிறப்பாகும். நேற்று மாலை நடன பாதேஸ்வரர் மீது சூரிய ஒளி நேராக தோன்றியது. இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரினம் செய்தனர்.