உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு.. ஸ்ரீரங்கபட்டிணத்தில் மஹா யாகம்!

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு.. ஸ்ரீரங்கபட்டிணத்தில் மஹா யாகம்!

அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம், செல்வ வளம் நிறைந்த குடும்ப வாழ்க்கை, உயர்ந்த கல்வித்திறன், செயல்திறன், தொழில்திறன், ஆக்க பூர்வமான சிந்தனைத்திறன், வியாபார அபிவிருத்தி, சிறந்த வேலைவாய்ப்புகள், தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கை, முயற்சிகளில் வெற்றி, தளராத மனம், ஆன்மீக உணர்வு மற்றும் மனித நேயம் ஆகியவற்றை  வேண்டி மே 1 முதல் மே 13 வரை, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மிக அற்புதமான ஒரு மஹாயக்ஞம் நடைபெறுகிறது.

விழாவில் இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும், 1500 வைதீகர்களை அழைத்து வைதிக முறைஇப்படி ஒரு மஹா யக்ஞம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மஹா யக்ஞத்தில் 1200 வைதிக புரோகிதர்களால், 12 நாட்களில் 112 யக்ஞ குண்டங்களில் ஸ்ரீ லக்ஷ்மீநரஸிம்ஹனுக்கு ஒரு கோடி ஆஹுதிகள் அளிக்கப்படும். 300 வைதீர்களை கொண்டு வேத, வேதாங்க, ஆகம, இதிஹாஸ, சாஸ்த்ர மற்றும் புராண நூல்களின் பாராயணம் செய்யப்படும்.

மஹாயக்ஞத்தின் விசேஷ அம்சங்கள்: பாரதத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் <உலகெங்குமிருந்தும் வேதவிற்பன்னர்கள் வித்வான்கள் மற்றும் பேரறிஞர்களின் வருகை 108 வேத விற்பன்னர்கள், கனபாடிகள் ஆகம வித்வான்கள் மற்றும் திவ்ய ப்ரபந்த அதிகாரிகளை கௌரவித்தல் 50 வேத பாடஸாலை அத்யாபகர்களை கௌரவித்தல் 108 கோவில் அர்ச்சக தம்பதிகளுக்கு தம்பூதி பூஜை 108 கன்யா பூஜை 1008 பிரம்மசாரி பூஜை கோபூஜை, அஸ்வபூஜை, கஜ பூஜை நடைபெறுகிறது.

மே 1ம் தேதி காலை 10.00 முதல்  மாலை 1.00 வரை மஹாஸங்கல்பம்,
மே 2ம் முதல் மே12 ம் தேதி  காலை 7.30 முதல் 12.00 மணி வரைஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹ மஹாமந்த்ர  கோடி மஹாயக்ஞம்.
மே13 ம் தேதி காலை 7.00 முதல் 9.15 வரை ஸ்ரீ லக்ஷ்மீ நரஷிம்ஹ ஜயந்தி மஹா பூர்ணாஹுதி நடைபெறுகிறது.

இடம்: லக்ஷ்மீ நரஸிம்ஹ சேத்ரம்
பொலகோலா, ஸ்ரீரங்கபட்டிணம், கர்நாடகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !